எம்.எல்.ஏக்களின் உரிமையை பறிப்பது சரியல்ல! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

சனி, 11 ஏப்ரல் 2020 (10:28 IST)
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி கோரி வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண பணிகளுக்காக எடுத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பணம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை அரசு பறிப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்