தளர்வு காலத்தில்தான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்- சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (14:50 IST)
கொரோனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமலில் இருந்த தளர்வுகளற்ற ஊரடங்கு தற்போது தளர்வுகளோடு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்புகளும் இப்போது குறைந்து 4000 கிட்ட வந்துள்ளது. அதுபோல எந்த மாவட்டத்திலும் 500 க்கு மேல் பாதிப்பு இல்லை என்ற நிலை வந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். இப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்