அதிமுக அமைச்சரை விரட்டியடித்த பொதுமக்கள் - வீடியோ

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:14 IST)
அதிமுக அமைச்சர் பெஞ்சமினை, அவரது தொகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர். 
 
சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 
 

இந்நிலையில், தங்கள் தொகுதி பக்கம் செல்லும் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. சில இடங்களில் எம்.எல்.ஏக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கருணாஸ், அவர் தொகுதிக்கு சென்ற போது, அவருக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
 
இந்நிலையில், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பெஞ்சமின், தனது ஆதரவாளர்களுடன் தனது தொகுதிகு சென்றார். அப்போது, அவரை வழிமறித்த தொகுதி மக்கள் அவரை திரும்ப போகச் சொல்லி கோஷம் எழுப்பினர். இதனால், பெஞ்சமினின் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதையடுத்து, போலீசார் அதில் தலையிட்டு, பெஞ்சமினை திரும்ப செல்லுமாறு வலியுறுத்தினர். எனவே, வேறு வழியின்றி பெஞ்சமின் வந்த வழியே திரும்பி சென்றார். 
 
அடுத்த கட்டுரையில்