சிறப்பு பேருந்துக்கு 50000 பேருக்கு மேல் முன்பதிவு: கலகலக்கும் தீபாவளி!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (20:48 IST)
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் 50000 பேருக்கு மேல் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வது வழக்கம். இந்த முறையும் அதுபோல ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 51 ஆயிரத்து 208 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், மற்ற ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல 17 ஆயிரத்து 338 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் தமிழக அரசுக்கு சுமார் இரண்டரை கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்துகளில் மட்டுமல்லாமல் ரயில்கள், தனியார் பேருந்துகளிலும் டிக்கெட் புக் செய்தவர்களையும் கணக்கிட்டால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் தீபாவளிக்கு ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. முன்பதிவு அல்லாமல் உடனடி டிக்கெட் எடுத்து செல்பவர்கள் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்