இந்த நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது 5 மணி ஆகிய பின்னரும் ஒருசில இடங்களில் மட்டும் மதுக்கடைகள் மூடுவதற்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மதுவை வழங்கிய பிறகே கடைகளை மூட வேண்டும் என மதுப் பிரியர்கள் வலியுறுத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து டோக்கன் கொடுத்தவர்களுக்கு மட்டுமாவது மது பாட்டில்களை வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து மதுக்கடைகளை மூட முடியாமல் டாஸ்மாக் அதிகாரிகள் சிக்கல் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த சிக்கல் ஒருசில டாஸ்மாக் கடைகளில் மட்டும் தான் என்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் சரியாக 5 மணிக்கு மூடப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது