கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 42 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது “மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மது வாங்க வெளிமாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும் போராட்டங்கள் நடத்தி மக்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடவே எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” என தெரிவித்துள்ளார்.