ஆபத்தை உணராமல் கடல்பகுதியில் குவிந்த மக்கள்: போலீசார் எச்சரிக்கை

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:36 IST)
சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் உள்ள புயல் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குவிந்து வருவதாக தகவல் வந்ததையடுத்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் கடல் அலைகள் சீற்றத்துடன் உள்ளது. இந்த நிலையில் கடல் அலையின் சீற்றத்தின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரையில் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, மகாபலிபுரம் கடற்கரை ஆகிய பகுதிகளில் மக்கள் கடல் சீற்றத்தை பார்த்து வருகின்றனர்
 
ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் பொதுமக்கள் குவிந்து உள்ளதை அடுத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடை விதிக்கப்பட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாமென்றும் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி பல பொதுமக்கள் கடல் பகுதியில் சென்று ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்