34 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:32 IST)
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை ஆரம்பிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோதிலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல் சேதம் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் அறிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்