பை கொண்டு வந்து பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்… தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:29 IST)
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப் படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அல்லது 4 ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். 

இந்நிலையில் பல இடங்களில் பரிசு தொகுப்பை கொடுக்கும் பைகள் தயாராக இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் தாங்களாகவே பையை எடுத்து வந்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்