மக்களே உஷார்..! மூன்று மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை!

Prasanth Karthick
புதன், 15 மே 2024 (12:59 IST)
கடந்த வாரம் முதலாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வந்தது. கடந்த வாரம் முதலாக பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்துள்ளது. ஆனால் சில பகுதிகளில் எதிர்பாராத அளவு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலும் உண்டாகிறது.

முன்னதாக மதுரை, பொள்ளாச்சி பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது . இந்நிலையில் இன்று மூன்று மாவட்டங்களி அதி கனமழை பெய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்