தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 28 மே 2018 (17:00 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. 
 
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (தேர்தல்) சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர்தான் துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 
 
திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கண்ணன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் அலுவலக பகுதியில் சிப்காட் ஆய்வாளர் அரிகரனுக்கு சேகர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, 3 முறை வானத்தை நோக்கி சுட்டும் போராட்டக்காரர்கள் கலையவில்லை. எனவே, வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்