வெளியாட்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் தூத்துக்குடி கிராமம்!

திங்கள், 28 மே 2018 (13:26 IST)
தூத்துக்குடி அருகே உள்ளது திரேஸ்புரம் என்ற மீனவ கிராமம். சுமார் 600 மீனவர் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
 
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி, கிளாஸ்டன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
 
இதையடுத்து சோகத்தில் மூழ்கியது அந்த மீனவ கிராமம். இதையடுத்து அரசு அதிகாரிகள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியாட்கள் எவரும் தங்கள் பகுதிக்குள் நுழைவதை அந்த கிராம மக்கள் விரும்பவில்லை.
 
தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதையும் தடுக்க விரும்பினர். இதற்கென, திரேஸ்புரத்துக்குள் நுழையும் இடத்தில் உள்ள பாலத்தின் குறுக்கே நாட்டுப் படகு ஒன்றை நிறுத்திவைத்துள்ளனர். 
 
வெளியாட்கள் உள்ளே செல்வதையோ, உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்வதையோ இந்தப் படகு தடுக்கிறது. இதனால் இந்த மீனவ கிராமம் தீவாக மாறியுள்ளது. இவர்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்புவது எப்போது?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்