குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி எப்போது? மாவட்ட ஆட்சியர் தகவல்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (13:25 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன என்பதும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு தளர்வுகளாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பாக இன்று முதல் மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இன்று முதல் மெரினா கடற்கரையில் வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் வருகை தர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக மூடப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி உண்டு என்ற அறிவிப்பு பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் குற்றாலத்திற்கு செல்ல தற்போது அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்