சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா: அனைத்து துறைகளையும் மூட உத்தரவு

திங்கள், 14 டிசம்பர் 2020 (09:24 IST)
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் இயல்பு நிலையும் கிட்டத்தட்ட திரும்பி விட்டது என்றே கூறலாம். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்கி விட்டது என்று கூறமுடியாது 
 
இந்த நிலையில் திடீரென சென்னை ஐஐடியில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகவும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளையும் உடனே மூட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்