தமிழகத்திற்கு ஓரவஞ்சனை..! பாஜவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்! - டி.ஆர்.பாலு!

J.Durai
திங்கள், 19 பிப்ரவரி 2024 (15:47 IST)
திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக பொதுக்கூட்டம் திருச்சி புத்தூரில்  நடைபெற்றது அப்போது பேசிய திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எம்.பி. பேசியதாவது:


 
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த பொதுக்கூட்டம் ஒரு முன்னோட்டம்.

திருச்சி தொகுதியில் போட்டியிட அனைவரும் விருப்பப்படுகின்றனர், ஏனேன்றால் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோரின் வழிநடத்தலில் திருச்சி மாவட்டம்  சிறப்பாக செயல்படுகிறது.

திருச்சிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. குறிப்பாக காந்தியடிகள் லால்குடியில் நடத்த கூட்டம் ஒன்றில் பேசியபோது கைகுழந்தையுடன் வந்த ஒரு பெண் அவரிடம் அரயணா நாணயத்தை சுதந்திர போராட்டத்திற்காக கொடுத்தார். அப்பேர்பட்ட தேச பக்தி நிறைந்தவர்கள் சோழ நாட்டு பெண்மணிகள்.

2014ல் பாஜ ஆட்சி அமைந்தபோது வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னார். மோடி இப்போது வரை அதற்கு எந்த பதிலும் இல்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.

இப்போது அதில் பாதி பேருக்கு கூட வேலை கிடைத்தபாடில்லை. நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பிரதமர் மனமோகன் சிங்கிடம் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும் என மனு ஒன்றை கொடுத்தார். அதை செயல்படுத்த உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் நிலம் கையகபடுத்தல் சட்டம் என 2 சட்டங்ககளை இயற்றி அதனை செயல்படுத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டது.

ALSO READ: அமலாக்கத்துறை மட்டும் இல்லையெனில் பாஜக என்ற கட்சியே இருக்காது: அரவிந்த் கெஜ்ரிவால்
 
2014 மோடி ஆட்சி அமைந்த பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. அதற்காக போராடிய விவசாயிகள் பட்டினியால் இறந்தனர்.

தற்போது டில்லியில் போராடும் விவசாயிகளும் தீவிரவாதிகளைப் போலவே நடத்தப்படுகின்றனர்.

விலைவாசி, எரிபொருள் விலை பல மடங்கு உயர்வு
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ்  ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55, கேஸ் விலை ரூ.400ம் மட்மே இருந்தது. மோடி ஆட்சியில் அது பல மடங்கு அதிகரித்துள்ளது.

பெட்ரோல் ரூ.103ம், க கேஸ் ரூ. ஆயிரத்து 100லும் வந்து நிற்கிறது. எரிபொருளுக்கு செலுத்தும் வரிகள் அனைத்தும் கஜானாவிற்கே செல்கிறது. விலைவாசி குறைந்தபாடில்லை.

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை  2019ல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும் என்றார். தற்போது வரை அது நடக்கவில்லை. தமிழகம் ரூ. பல லட்சம் கோடியை வரியாக பெற்றுக்கொண்டு வெறும் ரூ.1.30 லட்சம் மட்டுமே தருகிறது மத்திய அரசு. அதாவது தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிப்பணம் ரூபாய்க்கு வெறும் 26 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது.

2024 ல் பதிலடி
ஜாதி, மத, இன  பேதமின்றி ஆட்சி நடத்துபவர்கள் நாங்கள். அதனாலே நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தலித் சமூதாயத்தில் ஒருவரை இணை செயலாளராக பணி அமர்த்தினேன்.

அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கினேன். எனவே தென்னகத்தை வஞ்சிக்கும் பாஜவை எதிவரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து திமுக தோழமை கட்சிகளை வெற்றி பெற செய்து பாஜவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்