அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் எப்போது..? தேதியை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி..!!

Senthil Velan

திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:47 IST)
அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று  அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று கொள்ள வேண்டும். பொதுத் தொகுதிக்கு 20,000, தனித் தொகுதிக்கு 15,000 கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: யாருடன் கூட்டணி..? 2 நாட்களில் நல்ல செய்தி வரும்..! நடிகர் கமல்
 
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்