பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை: ஒருதலை காதலனை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (18:02 IST)
பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை: ஒருதலை காதலனை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு
பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யா என்பவரைஒருதலையாக காதலித்த இளைஞர் சதீஷ், சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடூர காதலனை கண்டு பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் சதீஷ் என்பவர் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டார் 
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகள் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் சதீஷை தேடி வருகின்றனர் இன்னும் ஓரிரு நாளில் சதீஷ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்