பானிபூரி சாப்பிட்ட இளம்பெண் சுருண்டு விழுந்து பலி.. சென்னை மெரீனாவில் சோகம்..!

திங்கள், 3 ஏப்ரல் 2023 (07:35 IST)
சென்னை மெரினாவில் பானிபூரி சாப்பிட்ட இளம் பெண் ஒருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையை சேர்ந்த 24 வயது மோனிஷா என்பவர் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார் அப்போது அவர் பானிபூரி சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோனிஷா மயக்கமடைந்தார்
 
இதனை அடுத்து அவர் உடனடியாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனார். அவரது மரணத்திற்கு பானிபூரி சாப்பிட்டது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் உடல்நல கோளாறா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
 
சென்னை மெரினாவுக்கு நண்பர்களுடன் சென்ற இளம் பெண் திடீரென உயிரிந்த சம்பவம் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்