தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

Siva

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (14:53 IST)
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் சுமார் 6.5 லட்சம் பீகார் மாநிலத்தவர்கள் வசிப்பதாகவும், இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியத் தேர்தல் ஆணையம், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறி வேறு மாநிலங்களுக்குச் சென்ற 36 லட்சம் வாக்காளர்களை கண்டறிந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் வேலைக்காக வந்து தங்கியுள்ளனர். இந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6.5 லட்சம் பீகார் மாநிலத்தவர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இவர்களில் 3.5 லட்சம் பேர் சென்னையில் மட்டுமே இருப்பார்கள் என தெரிகிறது. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை நகரங்களிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 
விரைவில் தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்க உள்ளதால், இவர்களின் பெயர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை இவர்களின் பெயர்கள் தமிழகப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அடுத்தடுத்த தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள்.
 
இதேபோல், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் பெயர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.
 
தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும் 6.50 பீகார் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை பொறுத்து முடிவுகள் மாறவும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்