தமிழகத்தில் கோடை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வேலூர், சேலம் உள்பட பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூ,ர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.