ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாம்பன் பாலம். கடலின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக் கடல் பகுதியில் இன்று காலை முதலே கடல்நீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது.
நேற்றிரவு கீழக்கரை கடற்கரை பகுதியில் ஊதா நிறத்தில் வெளிச்சம் தெரிந்து வருவதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர். இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில்....
மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. பயப்படவேண்டியதில்லை... கடலில் உள்ள நுண்ணுயிர் பாசிகள் காரணமாக கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருகிறது. இது தானாகவே சரியாகிவிடும்.எனவே மீனவர்கள் அச்சமடைய வேண்டாம் என்று ஆராயர்ச்சி செய்து தெரிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர்.