இந்த நிலையில் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை என்ற பகுதியில் தமிழ்நாடு சார்பில் ட்ரைலத்தான் போட்டிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டிகள் முடிந்த பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது