ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் எடப்படி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெற உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ், தினகரன், திமுக என அனைவரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அதிமுக இரு அணிகளாக இருப்பதால் ஓபிஎஸ் அணி, சசிகலா அணியை வென்று அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என போராடி வருகிறது. திமுக ஒருபக்கம் அதிமுக கட்சியை வீழ்த்த வேண்டும் என எண்ணத்தில் உள்ளது. இவர்கள் இல்லாமல் ஜெயலலிதா அண்ணன் மகளாகிய தீபா, அத்தை தொகுதியை கைப்பற்றுவேன் என களமிறங்கியுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் சிலருக்கு தினகரன் வேட்பாளாராக களமிறங்கியது பிடிக்கவில்லை. இதனால் தினகரனுக்கு எதிராக பல வியூகங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மீனவர்களுக்கு எதிராக முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என தெரிவித்து வருகின்றனர்.
மீனவர்கள் எல்லை தாண்டிப் போக வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்துகிறது. இந்த அறிவிப்பு மீனவ மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் மீனவ வாக்குகள் தினகரனுக்கு விழாது என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வியூகம் என கூறப்படுகிறது.