திமுக போராட்டத்தில் காங்கிரஸும் பங்கு பெறவேண்டும் – சிதம்பரம் டிவிட்டரில் அறிவிப்பு !

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:42 IST)
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸும் கலந்து கொள்ள வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்றக் காவலில் இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே மற்ற சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உணவுக் கூட மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஹார் சிறையில் இருந்தபடியே தனது டிவிட்டர் கணக்கின் மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துகளை சொல்லி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது டிவிட்டரில் ‘தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு டிவிட்டில் ‘எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் 20ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்