சிதம்பரத்தின் உதவியாளர் பெருமாளை சுற்றி வளைக்கும் சிபிஐ & அமலாக்கத்துறை !

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (13:30 IST)
ப சிதம்பரத்தின் உதவியாளராக இருந்த கே வி கே பெருமாள் என்பவரை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் 22 நாட்களாக ஜாமீன் கிடைக்காமல் இப்போது திஹார் சிறையில் உள்ளார். அரசியல் பழிவாங்கல்களுக்காக இந்த கைதை மத்திய அரசு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் சிபிஐ- ஆல் நிரூபிக்கமுடியவில்லை என காங்கிரஸ் காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் அவரது நெருங்கிய உதவியாளராக 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இருந்த  கே.வி.கே. பெருமாளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது என டெல்லியில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்துக்கு எதிராக வலுவான ஆதாரத்தைத் திரட்டவே இந்த செயல்களில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்