தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிறுப்பில் உள்ளது- மா.சுப்பிரமணியன்

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (16:39 IST)
தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்  கையிறுப்பில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் நேற்று ஒரே நாளில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

எனவே  இதன் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவலாம் என அண்டை நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு இன்று, அனைத்து அரசு  மாநிலங்களின் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் என் அறிவுறுத்தியது.

 ALSO READ: ''பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்''- மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

இந்த நிலையில், தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மருந்துகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிறுப்பில் உள்ளதாக  அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா தடுப்பூசி  மூக்கு வழியே செலுத்தும் மருந்தை மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

recommended by

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்