திருப்பி அனுப்பப்படும் வெளிமாநில வாகனங்கள்: சோதனைச்சாவடியில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (17:10 IST)
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் திருப்பி அனுப்ப படுவதாக வெளிவந்திருக்கும் செய்தியால் சோதனைச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பதும் இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்னும் ஒரு சில அதிரடி அறிவிப்புகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இபாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படும் என்று திடீரென அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இபாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்ற செய்தி வெளியாகி உள்ளது., இதனால் ஓசூரில் உள்ள சோதனை சாவடியில் அருகே என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்