மதுரையில்எய்ம்ஸ்மருத்துவமனைஅமைப்பதற்கானஅரசாணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.
2015ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுபற்றி உறுதியான எந்த தகவலையும் மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஜூன் 2ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார். அதேபோல், மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் இதை உறுதி செய்தார்.
இப்படி தமிழக அமைச்சர்கள் பலர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மூறிஉ வந்த நிலையில், இன்று மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தனது அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதலாது எய்ம்ஸ் மருத்துவ மனை அமையவுள்ளது தமிழக மக்களுக்கும் குறிப்பாக மதுரை மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.