உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட இருக்கிறது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 20, 23 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட இருக்கிறது.
அதோடு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.