வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மோந்தா' புயல் அக்டோபர் 28 அன்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை அதாவது அக்டோபர் 28 அன்று அதி கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருவள்ளூரில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.