வங்க கடலில் உருவான மோன்தா புயல் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையிலான பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சென்னைக்கு 560 கிலோமீட்டர் தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.