
தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில காலமாக நாடு முழுவதும் தெரு நாய்க்கடிகள், தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் பலரும் தெருநாய்கள் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரும் அதேசமயம், நாய் ஆர்வலர்களோ அவற்றை தனி ஷெல்டர்களில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இப்படியான சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை எடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகியவை மட்டுமே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தன.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் “இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்று தெரியாதா? ஆகஸ்ட் மாதமே உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை” என கூறியதுடன், 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K