20 செமீ வரை மிக கனமழை பெய்யும்: தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva

வியாழன், 16 அக்டோபர் 2025 (08:13 IST)
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் 17 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
 
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மிகுந்த அவசியமிருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்