உளவு பார்க்கும் முதல்வர்? - கடுப்பில் ஓ.பி.எஸ்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (09:24 IST)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான நபர்கள் மூலம் உளவு பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
எலியும், பூனையுமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். அதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர். 
 
ஆனால், ஓ.பி.எஸ் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறாராம் முதல்வர். அவர் எங்கு சென்றாலும், தனக்கு விசுவாசமாக உள்ள சில அமைச்சர்களை அவருடன் அனுப்பி வைக்கிறாராம் எடப்பாடி. சமீபத்தில் கூட அண்ணா பல்கலைக்கழக விழாவிற்கு வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடுவை சந்தித்து நீண்ட நேரம் பேசினார் ஓ.பி.எஸ்.
 
அப்போது கூட தனக்கு நெருக்கமான ஜெயக்குமாரை அவருடன் அனுப்பி வைத்தாராம் எடப்பாடி. இப்படி தான் எங்கு சென்றாலும், தனக்கு நெருக்கமான அமைச்சர்களை தன்னுடன் அனுப்பி, தன்னை உளவு பார்ப்பது ஓ.பி.எஸ்-ற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என செய்திகள் உலா வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்