அடுத்த முதல்வர் செங்கோட்டையன் ; தூது விட்ட தினகரன் : அதிச்சியில் எடப்பாடி?
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (10:21 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியை கலைத்து விட்டு புதிய முதல்வரை நியமிக்கும் வேலையில் டிடிவி தினகரன் இறங்கிவிட்டதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தன்னை ஓரங்கட்டும் வேலையில் இறங்கிய போது, சசிகலா கேட்டுக்கொண்டதற்காக பொறுமையாகவே இருந்து வந்தார் தினகரன். ஏனெனில், பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணி அப்போதுதான் இணையும், இரட்டை இலையை கைப்பற்ற முடியும் என்பவை முக்கிய காரணங்களாக இருந்தன.
ஆனால், இரு அணியும் இணைந்த பின், தினகரன் மீதான நடவடிக்கையில் அழுத்தம் காட்ட, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்தார் தினகரன். தற்போது அவர்களை உல்லாச விடுதியில் தங்க வைத்து எடப்பாடி தரப்பிற்கு பீதியை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கி, அதிமுகவிலிருந்து அவரையும் விரட்டும் வேலையில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து தீவிரமாக செயல்பட துவங்கியுள்ளது தினகரன் மட்டும் சசிலாவிற்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்த போது, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த பிரமாணப் பாத்திரத்தை வாபஸ் பெறுவதற்காக ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி இருவரும் இன்று டெல்லி செல்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த சசிகலா, முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை தூக்கிவிட்டு வேறொரு முதல்வரை நியமிக்கும் அசைன்மெண்டை தினகரன் மற்றும் திவாகரனுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
களத்தில் இறங்கிய தினகரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் முதலில் நினைவிற்கு வந்துள்ளார். சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்ட போது, முதல்வர் பதவியில் அமர இருந்த சிலரில் செங்கோட்டையனும் இருந்தார். இறுதியில் அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது.
எனவே, தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் செங்கோட்டையனுக்கு தூது அனுப்பினாராம் தினகரன். ‘நீங்கள்தான் அடுத்த முதல்வர்.. என்ன சொல்கிறீர்கள்?’ என்கிற ரீதியில் தினகரன் அனுப்பிய நபர் பேச, இதை எடப்பாடியிடம் அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டாராம் செங்கோட்டையன்.
முதல்வர் பதவியிலிருந்து தன்னை விரட்டும் வேலையில் தினகரன் தரப்பு இறங்கிவிட்டதை உணர்ந்த எடப்பாடி தரப்பு அடுத்து என்ன செய்யலாம் என்கிற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.