இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஓபிஎஸ் எல்லோரும் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. நான் முதல்வராக இருந்த போது மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது நான் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினேன். அவர் உடனடியாக நான்கு துறைகளின் அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத் தந்தார். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் எனக் கூறியுள்ளார்.