பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக, காங்கிரஸின் கலாச்சாரம் – பிரதமர் மோடி

செவ்வாய், 30 மார்ச் 2021 (16:42 IST)
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் முதல்வரின் தாயாரை அவமானமாகப் பேசியுள்ளனர். இவர் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இழிவுபடுத்துவார்கள் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் திமுக பிரமுகர் ஆ.ராசா பரப்புரையின்போது, முதல்வரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதற்கு கனிமொழி , ஸாடாலின் கடுமையாகக் கண்டித்தனர்.

இந்நிலையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்டுவரும் பிரதமர் மோடி கூறியதாவது: திமுக மற்றும்காங்கிரஸ் தலைவர்கள் தங்கர் நிர்வாகிகளை கட்டுப்பாடுடன் பேச அறுவுறுத்த வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணியினர் முதல்வரின் தாயாரை அவமானமாகப் பேசியுள்ளனர். இவர் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இழிவுபடுத்துவார்கள் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்