நானே வருவேன்… அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (17:29 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள நானே வருவேன் திரைப்படம் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கான படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். அதில் ‘ நான் இந்த அளவு முன் தயாரிப்பில் எந்த படத்துக்கும் ஈடுபட்டதில்லை. நானே வருவேன் படப்பிடிப்புக்கு தயார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்