நான் ஜெ.வின் மகள் என்பது ஓ.பிஎஸ்-ற்கு தெரியும் - அடுத்த குண்டு வீசும் அம்ருதா

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:00 IST)
தான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தெரிவித்துள்ளார்.


 
தன்னை மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கும் படி பெங்களூரை சேர்ந்த அம்ருதா (30) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அம்ருதா ““நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவர்தான் என் தாய் என் உறவினர்கள் அனைவரும் கூறினர். அதை நிரூபிக்கவே டி என். ஏ சோதனை செய்யுமாறு கேட்டேன்.  
 
போயஸ்கார்டன் வீட்டில் அவரை சந்திக்கும்போதெல்லாம், இங்கிருந்து நீ சென்றுவிடு.. நீ உயிரோடு இருந்தால் போதும் என ஜெயலலிதா பலமுறை என்னிடம் கூறினர். என்னை ஆரத்தழுவி, கட்டியணைத்து முத்தம் கொடுப்பார். அவர்தான் என் அம்மா என்பது இப்போதுதான் புரிகிறது. அதை நான் உணர்கிறேன். விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என அம்ருதா கூறினார்.
 
மேலும், தான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அவரின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்