நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியவரின் வழக்கு தள்ளுபடி

திங்கள், 27 நவம்பர் 2017 (12:55 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு ஐயங்கார் பிராமண வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கு சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. 
 
மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனுதாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது எனவே சுப்ரீம் கோர்ட்டில் அறிவுறுத்தலின்படி அம்ருதா விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இதே மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்