தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

Prasanth K

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (13:52 IST)

பணி நிரந்தரம் கோரியும், தனியார் மயமாக்கலை எதிர்த்தும் போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனித் திட்டம் ஒன்றை அமைச்சரவையில் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதை கண்டித்தும், தற்காலிக பணியை நிரந்தரமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் ரிப்பன் மாளிகை அருகே போராடிய தூய்மைப் பணியாளர்களும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வந்தது. அதில் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் “தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவற்றிற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.

மேலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்க்கல்வி உதவித்தொகை, பணியாளர்களுக்கு காலை இலவச சிற்றுண்டி, சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் புதிய குடியிருப்புகள் என அறிவிப்புகள் ஏராளமாக வெளியாகியுள்ளது

 

பணி நிரந்தரம் கோரிய பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்காமல், அவர்கள் மருத்துவ நலன் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்