என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

Mahendran

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (14:58 IST)
எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, பாதுகாப்பு தேவை" என்று கூறி ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்த மனு, 24 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2023-ஆம் ஆண்டில் பிரிட்டன் நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். "இந்த மனு ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, மனுவை வாபஸ் பெற அனுமதி வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. 
 
இந்த சம்பவம், ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்