ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை.! ஜூன் 1-ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல்...!!

Senthil Velan

வியாழன், 30 மே 2024 (17:23 IST)
57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
 
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில்  உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4 தொகுதிகள்) என ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ALSO READ: எந்த பிரதமரும் மோடியை போல பேசியதில்லை..! பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார்..! மன்மோகன் சிங்...

இதையொட்டி  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்