மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு.. மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல்..!

Mahendran

சனி, 1 ஜூன் 2024 (08:37 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
 
சற்றுமுன் மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பீகார், பஞ்சாப், உ.பி., ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று 7ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தேர்தலின் வி.ஐ.பி வேட்பாளர்கள்  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நடிகை கங்கனா ரணாவத், மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக், லாலு பிரசாத் மகள் மிசா பாரதி ஆகியோர் ஆவர்.
 
இன்றுடன் 7 கட்ட தேர்தல் முடிவடைவதை தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்