ஒரே நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க செல்லும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: பரபரப்பு தகவல்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (20:08 IST)
ஒரே நேரத்தில் பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திண்டுக்கல் சென்று இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வெவ்வேறு விமானங்கள் மூலம் திண்டுக்கல் செல்ல உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த சந்திப்பில் இருவரையும் ஒன்றாக சந்தித்து பிரச்சனைகளை பிரதமர் மோடி தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்