பற்றி எறியும் மதுரை: மீண்டும் ஒரு ஜவுளி கடை தீ விபத்து!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (09:08 IST)
மதுரையின் பிரபல ஜவுளிக்கடையான ஏ.கே‌ .அகமத் நிறுவனத்தின் குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது.
 
மதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் நவபத் கானா தெருவில், துணிக்கடை ஒன்று உள்ளது. அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக துணிகளின் மூலம் பரவ ஆரம்பித்தது. 
 
இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் கிருஷ்ணமூர்த்தி (30), சிவராஜன் (36) ஆகிய இரண்டு தீயணைப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மஞ்சனக்கார இரண்டாவது தெருவில் உள்ள மதுரையின் பிரபல ஜவுளிக்கடையான ஏ.கே‌ .அகமத் நிறுவனத்தின்  குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது. திடீர்நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்