செய்தியாளர் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (22:13 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தனியார் தொலைக்காட்சியில் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இராமலை வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்தபோது செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார் 
 
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செய்தியாளரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் 
 
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் செய்தியை சேகரிக்க சென்ற செய்தியாளர் தாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்