இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவை ஆம்னி பேருந்துகள் துவங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ள நிலையில் முன்பை போல இல்லாமல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவையை தொடங்குவது தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும், அனுமதியும் வழங்காத நிலையில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவை ஆம்னி பேருந்துகள் துவங்கியுள்ளன.
ஜுன் 1 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்துக்களின் முன் பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.