தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு இடையே டாஸ்மாக் திறந்த போது அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
ஆம், தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மேலும் குறைந்துள்ளது. முதலில் ரூ.163 கோடியிலிருந்து ரூ.133 கோடியாக குறைந்த டாஸ்மாக் வருவாய், 3 ஆம் நாளான நேற்று மேலும் குறைந்து ரூ.109 கோடியானது.