முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி தினகரன் அணி, எடப்பாடி பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது.
அன்றைய காலத்தில் முதல்வர் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும்,துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
அதன்பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், சில மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பிஎஸ் மற்றும அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கினர்.
சமீபத்தில், அதிமுகவின் பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஓ.பி,.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் மாநாடு நடத்தினர்.
இந்த நிலையில், இன்று ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.